துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

0
61

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் நிலை வந்தது. இந்த அறிவிப்பை குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இந்நிலையில் துணை குடியரசு தலைவர் நேற்று காலை வழக்கமான பரிசோதனை செய்து கொண்டாராம். அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெங்கையா நாயுடுவின் மனைவியான உஷா நாயுடுவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் அவருக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்ட போதிலும் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.நாட்டு தலைவர்களுக்கு இந்த கதி என்றால் நாட்டிலுள்ள சாமானிய மக்களின் நிலை என்னவென்று  யோசிக்க கூட முடியவில்லை.

 

 

author avatar
Parthipan K