அதிர்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோய்த்தொற்று உறுதி!

0
96

நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதனையும் மீறி நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அதிகரித்து வருகிறது.

நோய் தொற்றுப்பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்ட பிறகும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. அதோடு இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில ,அரசுகள் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று உலக அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியும் மிகவும் மோசமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்று முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அந்தந்த நாடுகளிலும் கோடி கணக்கான உயிர்களைப் பலி வாங்கியதோடு உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடுகளும் ஸ்தம்பித்து போயினர், அதனால் சீனாவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஐநா சபைக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியாவிற்கு நோய் தொற்றுக்கான லேசான அறிகுறி உண்டானது, அவருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்தால், மாவட்ட மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார், மாவட்ட ஆட்சியர் உடன் பணிபுரிந்த அலுவலர்கள் ஊழியர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.