சமூக பரவலாக மாறிய கொரோனா பாதிப்பு! பொதுமக்களுக்கு மாநில முதல்வர் எச்சரிக்கை.!!

0
93

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகம் பெருகி வருகின்றன. கோவாவில் இதுவரை 1,039 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 370 பேர் குணமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில், கோவா முதல்வர் அம்மாநிலத்தில் கொரோனோ நோய்தொற்று சமூகபரவலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; கொரோனா ஒருவர் மூலமாக
மற்றொருவருக்கு எளிதில் பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து கூறிவரும் நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததோடு, இந்திய மருத்துவ கவுன்சிலும் சமூகபரவல் இல்லை என்றே கூறியுள்ளது. இந்நிலையில் கோவாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran