கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

0
139
Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?
Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.அதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.குறிப்பாக புதுவையில் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் மக்கள் அதிகளவு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அதன் மூலம் கொரோனா பரவல் பரவ அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.மேலும் தற்போதில் இருந்தே சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் பலபடுத்தபட்டு வருகின்றது.

தெலுங்கானாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஒருவரிடம் இருந்து 17 நபருக்கு பரவும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது.மேலும் ஒரு சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

அதனை தொடர்ந்து மக்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்றால் பொங்கல் பண்டிகை அன்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊரடங்கு போட வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.அதனால் மக்கள் சமூக இடைவெளி, முககவசம்,கிருமி நாசினி போன்றவற்றை முறையாக பயன்படுத்தினால் ஊரடங்கு அமலுக்கு வராது என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K