இன்று முதல் வழங்கப்படும் கொரோனா நிவாரணம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0
74

தமிழகத்தின் முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாகவே ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவர் தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்து அவரை முதலமைச்சராக அமர வைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அன்றைய தினமே 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில் முக்கியமாக கருதப்படுவது தான் தொற்று நிவாரண நிதிக்காக நான்காயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்த திட்டம்.

இந்தத் திட்டத்தை முதலில் மறைந்த திமுகவின் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் மூன்றாம் தேதி ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் தற்சமயம் இருந்து பெரும் நெருக்கடி நிலையை கருத்தில் வைத்து முதல் தவணை என்று ரூபாய் 2000 பணத்தை இந்த மாதமே வழங்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.அந்த உத்தரவின் பேரில் இன்று முதல் நிவாரணத்தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கென்று கடந்த பத்தாம் தேதியில் இருந்து எல்லா இல்லத்திற்கும் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

ஒவ்வொரு நியாய விலை கடை களிலும் நாள்தோறும் சுமார் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பணம் வழங்கப்படும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல் படுத்துவதன் மூலமாக தமிழக அரசு கருவூலத்திலிருந்து 4 ஆயிரத்து 153 கோடி செலவாகும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.