கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

0
60

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாக்கிழமை அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. புதன்கிழமை அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு ஆனது மாலை 6 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆனது கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 78.54 சதவீத வாக்குகள் வயநாடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அப்போது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது,  மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து அவர்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 14ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அதன்பின் வாக்கு எண்ணிக்கை ஆனது வருகின்ற 17ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாகவும் அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

author avatar
Parthipan K