இந்தியாவில் மீண்டும் எகிறும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

0
134

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் தற்போது வேகமெடுத்து வருகிறது. இது மீண்டும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.

ஆகவே நேற்றுமுன்தினம் இந்த நோய்த்தொற்று காரணமாக, 12,847 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நேற்று இந்த நிலவரம் மேலும் அதிகரித்து 12,847 என பதிவானது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் இந்த நோய்த்தொற்று பாதிப்பானது மேலும் அதிகரித்து புதிதாக 13,216 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டருக்கின்ற தகவலினடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,216 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 4,32,83,793 என அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் மூலமாக இந்த நோய்த்தொற்று பாதிப்புக்கு பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,24,840 என அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 8,148 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,26,90,845 என அதிகரித்திருக்கிறது.

அத்தோடு நோய்த்தொற்றுக்கு தற்போது 68,108 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நாட்டில் இதுவரையில் 1,96,00,42,768 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடுவே நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 4,84,924 மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 85,73,95,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.