நோய்த்தொற்று பரவல் எதிரொலி! மும்பையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு!

0
66

நோய்த் தொற்று பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் புதிய வகை நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில்,கொரோனா கடந்த ஒரு வார காலமாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

நோய் தொற்று தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் இருந்த சூழ்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 2172 பேரும், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பெரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தலைநகர் மும்பையில் மட்டும் நேற்றுமுன்தினம் 2510 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நோய் தொற்று பாதிப்பு நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாநில தலைநகர் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது, இதுகுறித்து துணை காவல்துறை ஆணையாளர் சைதன்யா வெளியிட்டிருக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் ஒரு சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புதிய வகை நோய் தொற்று மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்டவை மிக வேகமாக பரவுவதை கருத்தில் வைத்து மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே திறந்தவெளி உள்ளரங்கு ஹோட்டல்கள், உணவகங்கள், மண்டபங்கள், ரிசார்ட், க்ளப், மொட்டை மாடி பகுதி, என அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே மராட்டிய மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது, அதேநேரம் 144 தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து இருக்கிறது. ஜனவரி மாதம் 7ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்சமயம் இருக்கின்ற கட்டுப்பாடுகளின் கீழ் தொடர்வண்டி மற்றும் பேருந்து, அதோடு தனியார் கார்கள் இயக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.