தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று வரை சென்னையில் 9989 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15512 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த உயரிழப்பானது 103 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மேலும் 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 7491 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை 3,97,340 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 759 பேரில் 624 பேர்  சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பிய 24 நபர்கள்,  ராஜஸ்தானிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 6 நபர்கள்,  மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் திரும்பிய 3 நபர்கள்உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 12 நபர்கள் உள்ளிட்டோருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்த 12 நபர்களில் லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் 5 பேர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!
WhatsApp chat