மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

0
68

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் துரித படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. அது மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவலானது குறையாமல் இருந்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவிலும் கொரோனா பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நாள்தோறும் கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அந்த மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை போன்று 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் 3-வது அலை பரவல் மிகவும் மோசமாக உள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K