5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அவசர கடிதம்!

0
43

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது உலகமெங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில் உலகம் இருந்து வருகிறது. இந்தியாவில் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்துக்கு வந்து விட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி இருக்கிறது.

தமிழகம், மேற்குவங்கம், அரியானா, புதுடில்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த மாநிலங்களுக்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மத்திய அரசின் சார்பாக சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்படுகின்ற முக்கிய அம்சங்கள் என்னவென்றால், தமிழகத்தின் சென்னை, மராட்டியத்தில் மும்பை, மும்பை புறநகர் ,புனே, தானே, நாக்பூர், கர்நாடகத்தில் பெங்களூரு நகர்புறம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவில் குர்கான் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களில் நோய் தொற்று பாதிப்பு திடீரென்று குறிப்பிடத்தக்க எழுச்சி பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் பயணங்கள், திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குளிர்காலம் ஆரம்பித்து இருக்கின்ற சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரித்து உள்ளதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் மற்றும் கடுமையான சுவாச கோளாறு இருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் நோய்தொற்று அதிகரித்திருக்கிறது. இரட்டிப்பாக ஆவதற்கான நேரம் குறைந்து இருக்கிறது இந்த நோய் தொற்று மேலும் பரவாமல் இருப்பதையும், அல்லது தாமதமாக கண்டறிவது, உயிர் இழப்பு அதிகரித்த நிலையை அடையாமல் இருப்பதையும் உறுதி செய்ய முன் கூட்டியே அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கின்ற மாநிலங்கள் பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆர் டி பி சி ஆர் மற்றும் துரித பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு இடையேயான விகிதத்தை பராமரிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர் தொடர்புகளை தனிமைப்படுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும், அவர்களுக்கு பரிசோதனையும் நடத்த வேண்டும், தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளின் படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்க வேண்டும், மருத்துவமனைகளில் தயார் நிலையில் வலுப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று நிதி ஆதாரங்களை சரியான விதத்தில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், நோய் தொற்று தடுப்பூசி செலுத்துவதில் வேகம் காட்ட வேண்டும், கூடுதலான நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த வேண்டும், நோய் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.