சீனாவில் இறைச்சி கடைகள் மூடல்! இரண்டாம் கட்ட பரவல் வாய்ப்பு என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
68

சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இறைச்சி கடைகள் மூடப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சீனாவின் வூகாண் மாகாணத்தில் உண்டான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பல லட்சம் உயிரை பலிவாங்கியுள்ளது. மேலும் 80 லட்சம் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் சீனாவில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அச்சத்தை உருவாக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக அந்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் 2 ஆம் கட்ட நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது பீஜிங் பகுதியில் 9 பேருக்கும் பிற பகுதியில் 12 பேருக்கும் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பீஜிங் பெங்டாய் மாவட்டத்திலுள்ள இறைச்சி ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் ஊழியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இறைச்சி கடைகளின் மூலம் நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் இருந்த கடல் உணவு விற்பனை கடைகள், பிற இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. கொரோனா தொற்று மீண்டும் பரவக் கூடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் சீன அரசு செயல்பட்டு வருகிறது.

இதுவரை சீனாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 4,634 பேர் இறந்துள்ளனர்.

author avatar
Jayachandiran