கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

0
163
#image_title
கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை.
கொரானா என்ற தொற்று கடந்த நான்கு வருடங்களாக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதன் வீரியத்தை கட்டுபடுத்த முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021 வரை உச்சத்தில் இருந்த கொரானா தொற்று, அரசுகளின் பெரும்பாலான முயற்சியினால் கட்டுபடுத்தபட்டு வந்தாலும், இந்த பெருந்தொற்றானது மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த கொரானா பற்றி தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு ஆலோசகர் மருத்துவர் நரேஷ் புரோகித் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதும் சமிபகாலமாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த இரண்டு  மாதங்களாக இந்த தொற்று காரணமாக இதய நோயினால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த இதய நோயினால் மக்கள் மரணம் அடைகின்ற சம்பவம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக நமது சுகாதார பிரிவு சார்பில் அதிகளவு நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும் இந்த தொற்றின் காரணமாக ஏற்படும் தீடிர் மரணங்கள் குறித்து ஆராய குழு அமைத்து மக்களிடையே உள்ள பீதிகளை களைய வேண்டும் என மருத்துவர் நரேஷ் புரோகித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.