பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

0
113

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவிலும் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தோடு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காக்க பிரதமர் மோடி நிவாரண நிதி அளிக்குமாறு மக்களிடம் வேண்டு விடுத்தார். இந்தியாவின் அவசர காலத்தை புரிந்து பல்வேறு தனியார் தொழில்துறை நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர், நடிகைகள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணத்தை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை வழங்கி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார். மிசோரத்தின் மாநில முதல்வர் “ஜோரம் தங்கா’ அவரது டிவிட்டர் பக்கத்தில் சிறுவனின் நிவாரண நிதியுதவியை பாராட்டி பதிவு செய்துள்ளார். அதில், மக்கள் பலரும் நிவாரண நிதி அளித்த நிலையில் 7 வயது சிறுவன் ரோமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.333 நிவாரண நிதிக்கு உதவியுள்ளார் என்றும், நாட்டிற்காக உதவிய சிறுவனை மனதார பாராட்ட வேண்டும. உண்மையான ஹீரோ ரோமல்தான் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோமலிடம் கேட்டபோது; எல்லோரும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று பிரதமர் கூறியதை டிவியில் பார்த்தேன். எனது உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியாது, ஆனால் அது என் இரண்டு வருட சேமிப்பு. கொரோனா பாதிப்பில் பலர் அத்தியாவசியப் பொருட்களுக்கே சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சமயத்தில் உண்டியல் பணத்தை யாருக்கும் உதவாமல் இருப்பதில் என்ன பயன் என்றும், ஆகையால் எனது அப்பாவின் உதவியுடன் காவல் நிலையத்தில் எனது பணத்தை கொடுத்துவிட்டேன். என்று கூறினார். சிறுவனின் செயல்பாடு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Jayachandiran