கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

0
75

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

கொரோனா பாதிப்பை பயன்படுத்தி வாட்சப் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க அதிகபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் 1004 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பேர் இதனால் உயிர் இழந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் சமூக இடைவெளி என்ற பாதுகாப்பு வழிமுறை மக்களிடையே அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகளை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க தினமும் அடிக்கடி கைக்கழுவுதல், அசுத்தமான கைகளால் முகத்தை தொடாமல் இருத்தல், 1 மீட்டர் இடைவெளி விட்டு “சமூக இடைவெளி” என்ற பாதுகாப்பு வழிமுறை கடைபிடிப்பது மற்றும் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது, திருமண, ஆன்மீக விழா போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி இருப்பின் உடனடியாக மருத்துமனையை அணுகுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.

கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவசியமான சானிடைசர் என்னும் பாதுகாப்பு வேதிப்பொருளும், முகக் கவசமும் மக்களுக்கு அதிக தேவையாக இருப்பதால் இதற்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. பலர் இலவசமாகவும் சில இடங்களில் குறைந்த விலையிலும் விற்று வருகின்றனர்.  அத்தியாவசியப் பொருட்களை விலை அதிகமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசும் எச்சரித்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் முகம்மது நிஜாம் என்ற இரு இளைஞர்களும் முககவசம் மற்றும் சானிடைசரை மொத்தமாக வாங்கி வைத்து அதிகமான லாபத்திற்கு விற்றனர்.

இதனையடுத்து, வாட்சப் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்த நிலையில் கார்த்திகேயன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, நூற்றுக்கணக்கான சானிடைசர் மற்று முக கவச பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கல் மற்றும் அதிகவிலை விற்பனையில் ஈடுபட்ட அவரது நண்பரையும் கைது செய்தனர். மக்கள் கடுமையாக பாதித்த சூழலில் மனிதநேயம் இல்லாது அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் நடந்துகொண்ட சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran