தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு! அமைச்சர் வெளியிட்ட டுவிட்!

0
82

தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு! அமைச்சர் வெளியிட்ட டுவிட்!

தமிழகத்தில் மட்டும் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையில் கொரோனோ தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக மருத்துவத்திற்கே கட்டுப்படாத கொரோனா வைரஸ் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆறு பேரும் அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள. என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிற்கு செல்லாத மதுரை நபர் மற்றும் சைதாப்பேட்டை பெண்மணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சூழலில் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவர் இன்று அதிகாலை மருத்துவ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் பதிவை இட்டுள்ளார். நோயாளிக்கு உயர்ரத்த அழுத்தம், நுரையீரல் அடைப்பு, கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று மட்டுமே இருந்து வந்த அசாதாரண சூழலில் மதுரை நபர் இறந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு, தேவையற்ற கடைகள் அடைப்பு, அதிக கூட்டம் கூட வேண்டாம் என்று பல்வேறு வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மருத்துவ சிகிச்சைக்கான துரித நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

author avatar
Jayachandiran