கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

0
51

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்காக தொலைக்காட்சி மூலம் பல்வேறு முக்கிய தகவல்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.

தொலைகாட்சி மூலம் அவர் கூறிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு;

  • மத்திய அரசு கூறிய தேசிய ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இதுவரை 606 ஆக உயர்வு. மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி.
  • கொரோனாவால் யாரும் அச்சப்படாமல் எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  • இந்த கொரோனா பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
  • தமிழகத்தை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கொரோனாவை தடுக்க உங்களின் ஒவ்வொருவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும்.
  • உங்கள் குடும்பத்தோடு உங்களை தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சமுதாயத்தையும், நம் நாட்டையும் பாதிப்பில் இருந்து காப்பாற்றலாம்.
  • அரசின் உத்தரவை ஏற்று பொது இடங்களில் செல்வதை முற்றிலும் தவிர்த்து வீட்டோடு இருங்கள். அரசின் உத்தரவை மதியுங்கள்.
  • மத்திய அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு உங்களையும், உங்களது குடும்பத்தையும் பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்பதை உணரவும். இது விடுமுறை அல்ல.
  • அன்றாடம் வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
  • கொரோனாவிற்கு அவசர சிகிச்சை அளிக்க
    10,000 -த்திற்கும் மேற்பட்ட நோயாளர் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
  • வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரேசன் பொருட்களை விலையின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் தலா 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
  • காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறவும்.
  • அத்தியாவசிய பொருட்களை வாங்குவோர்
    மூன்று அடி சமூக இடைவெளி விட்டு நிற்கவும்.
  • கொரோனா வைரஸ் குறித்து யாரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அசாதாரண சூழலில் தனித்தும், விழித்தும் வீட்டிலேயே இருங்கள் என்று பல்வேறு முக்கிய விழிப்புணர்வு தகவல்களை எடப்பாடி தொலைக்காட்சியில் கூறினார்.
author avatar
Jayachandiran