கொரோனா அச்சுறுத்தலுக்கு வேற லெவலில் விழிப்புணர்வு: அதிரடி செயலில் மத்திய அரசு!

0
70

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

தற்போது வரை இந்த நோயை குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு மருந்து கண்டுபிடிக்க படாததால் இந்த நோய் பரவாமல் இருக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கரோனா வைரஸ் இருமல் தும்மல் தொடுவது போன்ற செய்கைகளாலேயே பரவிவருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பரவாமல் இருக்க ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான யுக்தியை கையாண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது வரை இந்தியாவில் 33 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நோய் அனைவருக்கும் பரவிவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனால் நமது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. அன்றாடம் நாம் தொலைபேசியில் பிறரை அழைக்கும்போது காலர் டியூனுக்கு பதிலாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்தியை கேட்க முடிகிறது.

அதில் இருமல் அல்லது தும்மலின் போது முகத்தை மாஸ்க் அல்லது கைக்குட்டையை பயன்படுத்தி மூடிக்கொள்ள வேண்டும். மேலும் வெளியில் சென்று வந்தால் கை கால்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பரிந்துரையின் பேரில் தொலைபேசி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது.

author avatar
Parthipan K