மீண்டும் பதவி ஏற்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்! முறைப்படி இன்று வெளியாகும் அறிவிப்பு!

0
125

அதிமுக கட்சி விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் இந்த வகையில் கடந்த 2014ஆம் வருடம் ஜெயலலிதா அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் வருடம் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும், ஆனால் நோய் பரவல் காரணமாக, உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் வருகிற 13-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நாளைய தினம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 3 மற்றும் 4 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது.

இந்தநிலையில், ஓ பி எஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் , போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய பெயரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், என்று எல்லோரும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதேசமயம் இந்த பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒரு சில நிர்வாகிகளும் தனியாக மனு கொடுத்தார்கள். இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்ததாக சொல்லப்படுகிறது.

அதிமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் இந்த மனுக்களை பரிசீலனை செய்தனர் இந்த பணியில் அவர்களுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் cv சண்முகம் ஆர் பி உதயகுமார் போன்றோர் இருந்தார்கள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் மனுக்களை தவிர மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இருவரும் போட்டியின்றி தேர்வு முறைப்படியான அறிவிப்பை பொன்னையனும் , பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டி இல்லாததன் காரணமாக, தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது இதன் மூலமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓபிஎஸ் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமியும், மீண்டும் அமர இருப்பது உறுதியாகி இருக்கிறது.