Connect with us

Breaking News

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

Published

on

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

காரில் ஏசியை போட்டு மது போதையில் தூங்கி தனியார் நிறுவனம் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் உள்ள கோவில் வீதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவியுள்ளார்.

இந்நிலையில் ரவிக்குமார் நெகமம் பல்லடம் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கியுள்ளார். பின்னர் காரில் அமர்ந்து மதுவை குடித்துள்ளார். அதைத்தொடர்ந்து போதை அதிகமானதால் காரில் ஏசியை போட்டுவிட்டு காரின் ஜன்னல் கதவுகள் எல்லாவற்றையும் மூடி உள்ளார். பின் சிறிது நேரத்தில் ரவிக்குமார் போதையில் தூங்கி உள்ளார்.

Advertisement

நேரம் ஆக ஆக காரில் உள்ள ஏசியில் இருந்து வந்த அதிகப் புகை மற்றும் அதிக போதை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரவிக்குமார் மயங்கி உள்ளார்.

இதற்கிடையே சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிக நேரம் கார் அங்கேயே நின்று கொண்டிருந்ததால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே மயங்கி கிடந்த ரவிக்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

அங்கு ரவிக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement