குக் வித் கோமாளி புகழின் இரண்டாவது திருமணம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

0
101

குக் வித் கோமாளி புகழின் இரண்டாவது திருமணம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

புகழ் விஜய் டிவியில் ஆரம்ப கட்டம் முதல் இருந்தாலும் அவருக்கு பெயர் மற்றும் புகழ் வாங்கி கொடுத்தது இந்த குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் மக்களுக்கு இவரை பெரிதும் பிடிக்க ஆரம்பித்தது. தற்பொழுது வரை இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் சின்னத்திரையை விட்டு தற்பொழுது வெள்ளி திரையில் பட படங்களில் கமிட் ஆகி வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக பென்சி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் இரு தினங்களுக்கு முன்பு பிள்ளையார் கோவிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. இதற்கு முன்பே பெரியாரின் சுயமரியாதை அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர். அதனை அடுத்த தான் இரண்டாவதாக பிள்ளையார் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மூன்றாவது முறையாக காதலியின் குடும்பத்திற்காக இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். நான் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்ய தயாராக உள்ளேன்.

அப்பா அம்மா ஆசைக்கிணங்க அவர்களின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன். தன் மனைவியின் குடும்பத்தின் ஆசைக்காக ஒரு முறை திருமணம் செய்து கொண்டேன் என சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு தனது கருத்தை கூறியிருந்தார். தற்பொழுது அவர் இரண்டாவது ஆக இந்து முறைப்படி திருமணம் செய்த வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.