ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

0
65

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி அடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் அதிபராக இருந்த டோனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவை எதிர்த்து அதனை மாற்றுவதற்காக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. கடைசியாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதற்கு இடையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் இந்திய அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் டிரம்புடன் நெருக்கமாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்கா சென்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில், அங்கு அதிபர் தேர்தல் முடிவுகள் மாறிப்போன காரணத்தால், அந்த சமயத்திலே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பலரும் விமர்சனம் செய்திருந்தார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டதுடன் தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பணிபுரிவதற்கு இந்திய வம்சாவளியினர் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதே இந்திய வம்சாவளியினர் இரண்டு பேரை நீக்கி இருக்கின்றார் ஜோ பைடன் என்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த அமித்ஜானி, மற்றும் ஷோனல்ஷா, ஆகிய இருவரையும் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்த இரு நபர்களும் இந்திய நாட்டில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும், நெருக்கமாக இருந்த காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஜனநாயக கட்சி முன்பு ஆட்சியில் இருந்த பொழுது இவர்கள் இருவரும் முக்கிய பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான அளவு வாழும் நாடு என்ற காரணத்தால், இந்துத்துவா கொள்கையை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடர்பில் இருந்ததால் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்துத்துவா கொள்கை கொண்ட பாரதிய ஜனதாவுடன் அவர்கள் தொடர்பில் இருந்த காரணத்தால், கிறிஸ்தவர்கள் பெருமளவில் வாழ்ந்து வரும் அந்த நாட்டில் இந்துத்துவா கொள்கை பரவி விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.