தமிழகத்தில் இதனால்தான் காங்கிரஸ் கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அனைவரையும் அதிர வைத்த அண்ணாமலை!

0
65

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள அவருடைய சிலைக்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் பொதுமக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானதை போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்லியிருக்கிறேன், நாங்கள் உருவாக்குவோம் என நான் தெரிவிக்கவில்லை. குடும்பக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை கூறியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி எந்த தனி மனிதனையும் நம்பி இல்லை புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்க கூடிய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கிறது. அதற்கான பெவிக்கொய்விக்கை வாங்கி கொடுக்க பாரதி ஜனதா கட்சி தயாராக இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

தமிழக காங்கிரஸ் கட்சி ஐ சி யுவில் இருக்கிறது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போகமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

திமுக கொடுக்கும் ஆக்சிஜன் மூலமாக காங்கிரஸ் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியின் பெரும் இதனை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எல்லாம் பார்க்கத்தான் போகிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.