சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்!!

0
136
#image_title

சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செய்ய ஏதுவாக வரும் 22 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததை தொடர்ந்து நேற்று கர்நாடகாத்தின் 24 ஆவது முதல்வராகவும், இரண்டாவது முறையாகவும் சித்தராமையா பதவி ஏற்றார். துணை முதல்வராக டி கே சிவகுமார் மற்றும் எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று இருந்தனர். இந்நிலையில் முதலில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு அதில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த ஐந்து உத்தரவாதங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நபர்களுக்கு எம்எல்ஏக்களாக பதவி பிரமாணம் செய்யவும் சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கவும் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர் வி தேஷ் பாண்டே தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தொடரின் போது அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஐந்து உத்தரவாதங்கள் தொடர்பான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

author avatar
Savitha