சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை?

0
127

சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை?

சென்னை:

பாஜக பிரமுகர்கள் 2 பேரை திமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகி உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆகியோரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், “சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? டெய்சிக்கு என் ஆறுதல் மற்றும் ஆதரவு” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக காயத்ரி ரகுராம் ஈடுபட்டு வருவதாக சொல்லி, 6 மாதம் காலம் அவரை கட்சியில் இருந்து மாநில தலைமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

trichy surya with daisy
trichy surya with daisy

இதனிடையே, டெஸ்சி மற்றும் திருச்சி சூர்யா, இருவரும் சமாதானமாக செல்வதாக விளக்கம் தந்தாலும், சூர்யா சிவாவை 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து, பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த ஒரே வாரத்தில் இது அத்தனை நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, பாஜகவின் உட்கட்சி விவகாரம் விமர்சனத்துக்கும், பரபரப்புக்கும் உள்ளாகி வருகிறது. கட்சி பிரச்சனைகள் என்பது அனைத்து கட்சியிலுமே இருக்கத்தான் செய்யும் என்றாலும், தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், இதுபோன்ற அதிருப்திகள்தான், மற்ற கட்சிகளுக்கு அரசியல் லாபக்கணக்கை தரக்கூடியவை என்பதையும் மறுக்க முடியாது.

காயத்ரியின் விளக்கத்தை கூட மேலிடம் கேட்க தயாராக இல்லையே ஏன்? இதுகுறித்து விசாரிக்க கமிட்டியை கூட ஏன் மாநில பாஜக நியமிக்கவில்லை? என்ற கேள்விகள் சோஷியல் மீடியாவில் வெடித்தபடியே உள்ளன. அதேசமயம், மேலிட தலைவர்களை சந்தித்து, தன் விளக்கத்தையும், புகாரையும் தரப்போவதாக காயத்ரியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

அக்கட்சியின் மகளிர் அணி தலைவரும், மூத்த நிர்வாகியுமான வானதி சீனிவாசனிடம் இதை பற்றி ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாகவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்க காயத்ரிக்கு, வானதி சீனிவாசன் உறுதி தந்தாகவும் கூட செய்திகள் கசிந்தன. மற்றொரு பக்கம், கட்சி தலைவர் நட்டாவை சந்திக்க பலவாறாக முயன்றும், காயத்ரியால் முடியவில்லை, மேலிட தலைவர்கள் அதற்கான நேரம் கொடுக்காததால், காயத்ரி அப்செட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

Gayathri Raghuram
Gayathri Raghuram

இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி, காயத்ரியை தங்கள் பக்கம் இழுக்க போவதாகவும், அதேபோல டெய்சியை, திமுக பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாகவும் இணையத்தில் செய்திகள் வட்டமடிக்கின்றன. டெய்சியையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று சிலர் அழுத்தம் தருவதாலேயே அப்படி ஒரு முயற்சியை திமுக துவங்கி உள்ளதாம்.

இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? என்று தெரியாவிட்டாலும், தேர்தல் சமயத்தில், அதிருப்தியாளர்களுக்கு மாற்று கட்சிகள் வலையை விரிக்க துவங்கிவிட்டனர் என்றே தெரிகிறது.

author avatar
Parthipan K