ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

0
77

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கும் என்ற பேச்சு வார்த்தையில் இதுவரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் சட்டசபை உறுப்பினர் ராமசாமி போன்றோர் பங்கேற்றிருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது,

எங்களுடைய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் நல்ல விதமாக நடந்து இருக்கின்றது விரைவாக எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த விதத்தில் காங்கிரஸ் கட்சியை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் திமுக சார்பாக கொடுக்கப்படும் குறைந்த அளவிலான சீட்டுகளை வாங்கி கொண்டு கூட்டணியில் இருக்கலாமா அல்லது வெளியேறலாமா என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய மாவட்ட அளவிலான தலைவர்களிடம் நாளைய தினம் கருத்து கேட்க இருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையிலேயே திமுக கூட்டணியில் எடுக்கலாமா அல்லது வெளியேறலாம் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சி தங்களுடைய கூட்டணியிலிருந்து வெளியேற்றும் விதமாக காங்கிரஸ் ஒரு சில வேலைகளையும் செய்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் தற்சமயம் காங்கிரஸ் கட்சி கருத்து கேட்கும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. அதோடு கமல்ஹாசன் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் இதன் காரணமாக திமுக கூட்டணியில் பரபரப்பு நிலவி வருகிறது.