லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

0
159
#image_title

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் சகோதரி பிரியங்கா காந்தி அவர்களுக்கு அன்பு செலுத்தும் விதமாக காஷ்மீர் பனிக்கட்டிகளில் அவருடன் விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

கர்நாடக சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தின் பொழுது பேருந்தில் ஏறி பயணம் செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது இராகுல் காந்தி அவர்கள் லாரியில் ஏறி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் லாரி டிரைவர்கள் தங்களது பணி நேரத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை லாரியில் பயணம் செய்தவாறு கேட்டறிந்தார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இராகுல் காந்தி அவர்கள் லாரியில் செல்லும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து மக்கள் மத்தியில் இராகுல் என்று கருத்து தெரிவித்துள்ளது.