மகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!

0
63

ஜெயலலிதாவின் தோழி சசிகலா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று மனிதாபிமான முறையில் பதிவு செய்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அடைந்த சேவிக்கலாம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்தார். அதனை அடுத்து அவர் அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பெங்களூரு நீதிமன்றத்தில் செலுத்தினார். இடையிலே சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக சிறையிலிருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார் சசிகலா.

இதனை தொடர்ந்து உடல்நிலை சீரானதை அடுத்து சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா. இதனையடுத்து சசிகலா விடுதலை அடைந்ததற்கான விடுதலைப் பத்திரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சசிகலா விடுதலை அடைந்ததை தொடர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ,மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த பிறகு சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தார் .இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் சில நாட்களுக்கு முன்பு சசிகலா உடல் நலம் பெற்று வரவேண்டும் என்று தன்னுடைய வலைதள பக்கத்தில் பிரார்த்தனை செய்து இருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெயபிரதீப் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நலம் பெற்று வரவேண்டும் என்று மனிதாபிமான முறையில் வாழ்த்து தெரிவித்தேன் என்று தெரிவித்தார்

அதோடு உலக அளவில் வைரஸ் பாதிப்பு குறைய வேண்டும் என்றும் அதிமுக எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

முகமே தெரியாத ஒருவர் எங்காவது கழகத்தை சார்ந்த பொறுப்புகளில் இருந்து விட்டு சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் அடித்து ஓட்டினால் உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். இந்த நிலையில் துணை அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் மட்டும் இவ்வாறு செய்யலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் துணை முதல்வரின் மகன் இது தேவையா என்பது போன்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.