குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்!

0
207
Confusion at the end of Group 4 exam! Answer by TNPSC!
Confusion at the end of Group 4 exam! Answer by TNPSC!

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்!

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சார் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 10,117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக எட்டு மாதங்களுக்குப் பிறகு இம்மாதம் 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை அறிவித்தது.

மேலும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தட்டச்சர் பணியிடங்களுக்கு வெளியான தேர்வு முடிவில் குளறுபடி இருந்ததால் தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அது பற்றி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் கேட்ட பொழுது அது போல் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான  தேர்வு முடிவு எந்த அடிப்படையில் வெளியிட்டப்படுகின்றன என்பது குறித்து விவரங்களையும் தெரிவித்தனர்.

இந்த குளறுபடி குறித்து சர்ச்சை புகார் பதில் கிடைப்பதற்குள் தென் மாவட்டத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2000 பேர் இந்த குரூப் 4 தேர்வு முடிவு தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எந்த விளக்கமும் வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு குரூப் 4 தேர்வு எழுத தேர்வர்கள் சிலர் சென்றனர்.

அவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை என்றும் அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள் .முன்னதாகவே டிஎன்பிஎஸ்சி கூறியபடி தமிழ் தகுதித்தார் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வுகள் உடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது அந்த வகையில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் தேர்வு எழுதிய பலர் ஏற்கனவே பலமுறை குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் என்பதால் அவர்கள் எளிதில் தமிழ் தகுதி தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வகையில் டிஎன்பிஎஸ்சி யின் இந்த தகவலும் தேர்வர்களால் ஏற்றுக் கொள்ளாததாக உள்ளது. இதேபோல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த 1089 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தேர்வு எழுதியவர்களில் காரைக்குடி தேர்வு மையத்தில் மட்டும் எழுதிய சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாகவே கடந்த 2019 ஆம் ஆண்டு இதுபோலவே கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தது விஸ்வரூபம் ஆனது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதுபோல நிகழ்வு அரங்கேறி இருப்பதாக கூறப்படும் இந்த முறைகேடு பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இந்த முறைகேடு கருவூல அலுவலர்களின் உதவியுடன் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்த முறை கேட்டு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

author avatar
Parthipan K