மணப்பெண்களுக்கு வழங்கபட்ட மேக்கப் கிட்டில் இருந்த ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்! மத்திய பிரதேச திருமண விழாவில் ஏற்பட்ட பரபரப்பு!!

0
120
#image_title

மணப்பெண்களுக்கு வழங்கபட்ட மேக்கப் கிட்டில் இருந்த ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்! மத்திய பிரதேச திருமண விழாவில் ஏற்பட்ட பரபரப்பு!

மத்திய பிரதேச அரசு நடத்திய திருமணவிழாவில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட கிப்ட் பாக்சில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததால் திருமணவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தண்ட்லா பகுதியில் நேற்று அதாவது மே 30ம் தேதி 296 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த திருமண விழாவில் மணப்பெண்களுக்கு பரிசாக மேக்கப் கிட் வழங்கப்பட்டது. பரிசாக வழங்கப்பட்ட மேக்கப் கட்டில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை பரிசாக வழங்கி இருக்கலாம் என்று மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம் சாட்டினார்.

இது குறித்து மாவட்ட மூத்த அதிகாரி ராவத் “குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் தந்திருக்கலாம். மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கவில்லை. மேக்கப் கிட்டில் இருந்த கருத்தடை மாத்திரைகளுக்கும் ஆணுறைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட மூத்த அதிகாரி ராவத் “முதலமைச்சர் திருமண திட்டத்தின் கீழ்  ஒவ்வொரு பயனாளியின் வங்கிக் கணக்கிலும் 49000 ரூபாயும் 6000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கூடாரம், உணவு, தண்ணீர் வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் திருமணவிழாவில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என்று எங்களுக்கு தெரியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.