தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை  மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

0
222
Conditions to climb Annamalaiyar hill on Deepatri day! The order issued by the District Collector!
Conditions to climb Annamalaiyar hill on Deepatri day! The order issued by the District Collector!

தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை  மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மடாவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.

மகாதீபம் அன்று சுமார் 25  லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தீபத்திருநாள் அன்று காலை 6.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி காலை ஆறு மணி முதல் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும்.முதன்முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மலை மீது ஏற புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மலை ஏற நிபந்தனைகள்:

மலை ஏற அனுமதி வேண்டும் என்றால் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டை ,வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் இருந்து ஏதேனும் ஒன்றின் நகல் சமர்ப்பித்த பின்னரே அனுமதி சீட்டு வழங்கப்படும்.

டிசம்பர் 6 ஆம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.மேலும் பட்டாசு ,கற்பூரம் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எடுத்து செல்ல தடை என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K