27 மாவட்டங்களுக்கு ஏகப்பட்ட தளர்வுகள்! மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!

0
74

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்களை பிரித்துள்ளனர்.

வகை 1 : 11 மாவட்டங்கள், கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல் பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

வகை2: 23 மாவட்டங்கள்,
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

இந்த 23 வகை மாவட்டங்கள் மேலும் கூடுதலாக தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. காய்கறி கடைகள் இறைச்சி கடைகள் மீன் விற்பனை செய்யும் கடைகள் பலசரக்கு மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி.
2. பழம் பூக்கடைகள் 6 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி.
3. பேக்கரி மற்றும் உணவகங்கள் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி.
4. இனிப்பு கார வகை விற்பனை செய்யும் கடைகளுக்கு 6 மணி முதல் 9 மணி வரை அனுமதி.
5. அரசு அத்தியாவசியத் துறையில் 100 சதவீத பணியாளர்கள் உடனும் மற்ற அரசு அலுவலகங்கள் 50 பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
6. சார்பதிவாளர் அலுவலகம் முழுமையாக இயங்க அனுமதி.
7. தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
8. ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
9. ஹார்டுவேர் கடைகள் மென்பொருள் விற்பனை செய்யும் கடைகள் 9 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி.
10. பழுது நீக்கும் கடைகள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
11. உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் நிறுவனங்கள் 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.
12. ஸ்டேஷ்னரி கடைகளுக்கு அனுமதி.
13. காலணி விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி.
14. கண் கண்ணாடி விற்பனை பழுது நீக்கும் கடைகள் செயல்பட அனுமதி.
15. வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் செயல்பட அனுமதி.
16. செல்போன் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி.
17. பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் மட்டும் அனுமதி.
18. வாகனம் ஆட்டோ டாக்சிகள் இப்படி உடன் செல்ல அனுமதி.

வகை 3,: 4 மாவட்டங்கள், சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்கள் தொற்று மிக குறைந்துள்ளதாக பிரிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு, மேலே கூறிய வகை 2 – இல் அனைத்தும் செயல்பட அனுமதி அளித்து மேலும் சில தளர்வுகளை அளித்துள்ளது.

1. குழந்தை சிறார் மாற்றுத்திறனாளிகள் முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்ற பெண்கள் விதவைகள் ஆகியோருக்கு இப்பதிவு இல்லாமல் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
2. சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோருக்கு இப்பதிவு இல்லாமல் அனுமதிக்கலாம்.
3. அரசு அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
4. தனியார் நிறுவனம் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதி.
5. இதர தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் வழிபாட்டு முறையைப் பின்பற்றி செயல்படலாம்.
6. கணினி இயந்திரங்கள் பழுது நீக்குவோர் தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய இப்பதிவு டன் அனுமதி.
7. பல்பு கேபிள் விற்பனை செய்யும் கடைகள் 7 மணி வரை செயல்பட அனுமதி.
8. பாத்திரக்கடை ,அழகு சாதன கடை, போட்டோ வீடியோ கடை, சலவை கடை, தையல்கடை ஆகியவை 9 மணி இரவு 7 மணி வரை அனுமதி.
9. கைவினை மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதி.
10. சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவைக்கு அனுமதி.
11. சலூன் கடைக்கு 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
12. திரைப்படம் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்களுடன் பணிபுரிய அனுமதி. பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
13. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து 50% இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
14. நான்கு மாவட்டங்களுக்கு இடையே போது பேருந்து போக்குவரத்து நிலையான நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
15. ஆட்டோ டாக்ஸி வாகனங்களுக்கு இபதிவு இல்லாமல் அனுமதி.
16. திருமண நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி.

author avatar
Kowsalya