தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு அரசு அளித்த புதிய சலுகை!

0
63

நாட்கள் செல்ல செல்ல நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் நிலைமை மிகவும் மோசமடைந்து இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது சற்று நிம்மதி தரும் விதமாக இருக்கிறது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இறந்துபோனால் அவருடைய குடும்பத்திற்கு தொழிலாளர் வைப்பு சார் காப்பீடு திட்டத்தின் கீழ் 6 லட்சம் இழப்பீடு கொடுப்பது வழக்கம் தான். தற்சமயம் அது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படாமல் எந்த வகையில் உயிர் இழந்தாலும் இந்த இழப்பீட்டுத் தொகை அவர்களின் குடும்பத்தை போய்ச்சேரும். அதற்கான படிவம் 51Fஐ பூர்த்தி செய்து பணியாற்றும் நிறுவனத்தில் கையெழுத்து பெற்று ரத்து செய்யப்பட்ட காசோலை, இறப்பு சான்று, வாரிசு சான்று, போன்றவற்றை ஒன்றிணைத்து வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இறந்து போனவரின் பிஎஃப் கணக்கில் இருக்கின்ற பணத்தை பெறுவதற்கு படிவம் 20 மற்றும் 10d போன்றவற்றை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் இதனை வழங்கி ஒரு வார காலத்திற்குள் பணம் கிடைப்பதற்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும். அதே போல மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஊதியம் வாங்குவோருக்கு இழப்பீடு தொகையாக இரண்டரை இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.