பொதுமக்களிடம் கண்ணீர்மல்க முக்கிய கோரிக்கையை முன்வைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

0
70

தமிழகத்தின் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் தெருநாய்கள் சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது அதோடு அப்படி சுற்றித்திரியும் செல்லப் மாவட்டத்தில் பிராணிகள் காரணமாக பல விபத்துகள் நிகழ்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் சாலையோரங்களில் பராமரிப்பு இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு எல்லோரும் முன்வரவேண்டும் எனவும் அவை நம்மிடம் அன்பை தான் எதிர்பார்க்கின்றது எனவும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

தெருக்களின் ஓரத்தில் பராமரிப்பு எதுவும் இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக எல்லோரும் முன்வரவேண்டும் எனவும், அவர்கள் நம்மிடம் அன்பு மட்டும்தான் எதிர்பார்க்கின்றது எனவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்ணீர் மல்க உரையாற்றியிருக்கிறார். நோய்தொற்று ஒட்டு மொத்த மனித இனத்தையும் பந்தாடி வருகின்றது. தொடர்ந்து அமலில் இருந்துவரும் ஊரடங்கும் காரணமாக, சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். ஆகவே அவற்றை எல்லாம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து பல தொண்டு நிறுவனங்கள் அமைப்புகள் உள்ளிட்டவைகள் சாலையோரம் இருக்கக்கூடிய செல்லப் பிராணிகளுக்கு உணவு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள், இந்த சூழ்நிலையில், ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் இருக்கின்ற கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச ரேபீஸ் தடுப்பூசி எழுத்து முகாமினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி இன்று ஆரம்பித்து வைத்தார். அப்போது மேடையில் உரையாற்றிய அவர் சீட்டுக்கட்டு களில் ஜோக்கர் இருப்பதே சிறந்தது எனவும், அந்த சீட்டுக்கட்டுகளில் இருக்கின்ற ஜோக்கர்கள் நாம் தான் எனவும் உரையாற்றினார். கடந்த 16 முதல் 18 மாதங்களாக நோய் தொற்று ஊரடங்கு காரணமாக, சாலையோரமாக இருக்கக்கூடிய செல்லப்பிராணிகள், விலங்குகளை நாம் புறக்கணித்து வருகின்றோம் எனவும் தெரிவித்த அவர் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மரியாதை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை அடுத்து உரையாற்றிய நீதிபதி, தன்னுடைய வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார், அதாவது அவரும் அவருடைய மனைவியும் கல்கத்தாவில் இருந்து சாலை மூலமாக சென்னைக்கு வருகை தந்த போது சாலையில் இருக்கக்கூடிய செல்லப்பிராணிகள் தங்களுடன் வந்ததாக தெரிவித்து இருந்தார். அந்த சமயத்தில் குழந்தை போல தாங்கள் வளர்த்த செல்ல பிராணி ஒன்று 13.5 வயதில் சென்னை வந்தவுடன் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் வயது மனிதனின் 92 வயதிற்கு சமம் எனவும், அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். அந்த செல்லப்பிராணி உயிர் எழுந்தவுடன் பலரும் வளர்ப்பதற்கு நாய்களை கொடுத்ததாகவும், ஆனால் அதனை வளர்க்காமல் தெரு நாய்களை பராமரித்து வருவதாகவும் கூறி இருக்கிறார். ஆகவே படித்தவர்கள் சாலையோர செல்லப்பிராணிகளை பாதுகாக்க முன்வரவேண்டும் எனவும், விலங்குகள் நம்மிடம் அன்பை மட்டும் தான் எதிர்பார்க்கின்றன. ஆனால் அதனை நாம் புரிந்து கொள்வதில்லை எனவும், கண்ணீருடன் உரையாற்றி இருக்கிறார். அவருடைய இந்த பேச்சு அங்கே இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.