முற்றிப் போன வாய்த்தகராறு! மாணவிகளிடையே குடுமிப்பிடி சண்டை சென்னையில் பரபரப்பு!

0
58

கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளிடையே முன்பெல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ஆர்வம் தலைகீழாக மாறியிருக்கிறது. எப்படியிருந்தாலும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் படிப்பில் எப்போதும் சுட்டி தான்.

பெண்பிள்ளைகளை பொருத்தவரையில் அவர்கள் சரியாக பாடத்தை கவனிக்காதது போல் தெரிந்தாலும் கூட அவர்கள் மிகவும் சரியான பதில் வழங்கியிருப்பார்கள்.

ஆனால் மாணவர்களிடையே கற்றல் திறன் எப்போதுமே குறைவாகத்தான் இருந்திருக்கிறது. பள்ளியானாலும் சரி, கல்லூரியானாலும் சரி, நன்றாக படிக்கும் மாணவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதேபோல முன்பெல்லாம் மாணவர்களிடையே தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகராறு ஏற்படுவதும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் தற்சமயம் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. இதற்கு உதாரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி இருக்கிறது.

இங்கே படித்து வரும் மாணவர்கள் நேற்று கல்லூரி முடிவடைந்தவுடன் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் இருதரப்பு மாணவிகளுக்கிடையே பேருந்து நிலையத்திலேயே திடீரென்று வாய்த்தகராறு உண்டானது. தகராறு வீரியமடைந்ததில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சக கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் மாணவிகள் போட்ட குடுமிப்பிடி சண்டையை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியதால் அந்த வீடியோ வைரலாகி விட்டது.