பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

0
97

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை மற்றும் இவர்களது 17 வயது மகள் கார்த்திகாவும் தலைவாசலில் அம்மாவுடன் இருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற இளைஞர் காதல் என்கிற பெயரில் மைனர் பெண்ணான கார்த்திகாவை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார். இதற்கு சதீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்.

இந்த கட்டாயத் திருமணத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர் இச்சம்பவம் காரணமாக தலைவாசல் காவல் நிலையத்தில், தனது பெண்ணை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக தெய்வான புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் பெண்ணை கடத்திச் சென்ற சதீஷின் குடும்பத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், புகாரளித்த தெய்வானை மற்றும் அவரது உறவினர்களை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தாய் தெய்வானையை போனில் தொடர்புகொண்டு பேசிய கார்த்திகா, கணவரின் வீட்டார் தன்னை வரதட்சனை கொடுமை செய்வதாகவும், உன் வீட்டில் இருந்து 1 லட்சம் பணம் வாங்கி வா என்று அடித்து துன்புறுத்தியதாகவும் அழுகையோடு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தெய்வானைக்கு போன் செய்து உங்கள் மகள் கார்த்திகா விஷம் குடித்து மயங்கிவிட்டாள். மருத்துவ சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தோம், சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டதாக சதீஷ் கூறினார்.

இத்தகவலை கேட்ட தெய்வானை பதறியடித்து ஆத்தூர் மருத்துவமனைக்கு சென்று மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தெய்வானை புகார் அளித்தார். என் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலியான காதலனை நம்பி பெற்றோரை எதிர்த்து கட்டாய திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய் வரதட்சனை வேண்டுமென்று நாடகமாடிய சதீஷின் போலியான காதலையும், அவரது குடும்பத்தினர் செய்த கொடுமையும் தாங்க முடியாமல் கார்த்திகா இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் மாணவியின் இறப்பு குறித்து விரைவில் உண்மை வெளிவரும்.

author avatar
Jayachandiran