கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

0
98

மனிதர்களுக்கு சளி பிடிப்பது கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பருவ நிலை மாற்றத்தால் துருக்கியில் உள்ள ஒரு கடலுக்கு சளி பிடித்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.

இதற்கு முன்னர் இதே மாதிரி ஏற்பட்டது கிடையாது. இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல. வேதனை அடைய வைக்கும் ஒரு விஷயம் என்ற விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கடலும் மனிதனும் ஒன்றுதான், மனிதருக்கு உடம்பில் வெப்பநிலை மாற்றம் ஆனால் சளி ஏற்படுவது இயல்பே. இது உடம்பில் உடல் சூடு அதிகரித்து இருப்பதற்கு ஒரு அறிகுறி என்றே கருதப்படுகிறது. நமக்குத் தேவையான ஆற்றலை உடலின் வெப்பம் சீராக அளிக்கிறது. ஆனால் அது அளவுக்கு மீறினால் நஞ்சு என்கிற வகையில்தான் நமக்கு சளி பிடித்து எச்சரிக்கையை காண்பிக்கிறது. ஆனால் இதற்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.

ஆம் சம்பந்தம் உள்ளது. நமது பூமி 71% கடற்பரப்பு களால் ஆனது. நான்கில் மூன்று பங்கு நீரை உடையது. இப்பொழுது புவி வெப்பமடைவதால் பெருங்கடலில் உள்ள நீர் சூடாகி கடலில் உள்ள பாசி போன்ற நுண் தாவரங்கள் அதிகமாக ஊட்டம் பெறுவதால் கடலுக்கு சளி ஏற்படுகிறது.

இந்த கடல் சளி பச்சை மற்றும் சாம்பல் வண்ண முடைய கோழை போன்ற கழிவுப் பொருட்களால் கடல் முழுவதும் பெருகி உடலின் மேற்புறத்தை பரப்பி விடுகிறது. அதேபோல் கடலின் அடிப் பகுதியையும் பல கிலோ மீட்டர்கள் வரை அடர்த்தியாக வளரும் திறன் கொண்டது.

இதனால் கடலில் உள்ள உயிரினங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கிறார்கள். எப்படி மனிதர்களுக்கு சளி பிடிக்கும் பொழுது நாம் மூச்சு விட சிரமப்படுவோமோ, அப்போது ஆக்ஸிஜன் நமக்கு தேவைபடுகிறதோ அதே போல்தான் கடலுக்கும்.

கடலின் மேற்பரப்பில் சளி போன்ற கோழைப் பரவி அடியிலும் பல கிலோமீட்டர்கள் பரவி வருவதால் கடலில் உள்ள மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஆக்சிஜன் இன்றி செத்து மடிகின்றன.

இதனால் அங்கு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது ஒரு அரிதான நிகழ்வு எனினும் நல்ல நிகழ்வு என்று சொல்ல முடியாது. கருங்கடலும், ஏசியன் கடலையும் இணைக்கும் மர்மரா பகுதியில் தான் இந்த தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது உலகம் அழிந்து வருவதற்கான அறிகுறி என்றே கூறலாம்.

கடலில் அதிக அளவில் கலக்கப்படும் கழிவுநீர் மற்றும் மாசுபாடுகளால் கால வெப்பநிலையும் கைகோர்த்து இந்த கடல் சளி உருவாகி உள்ளது. இது பரவினால் என்ன ஆகும் என்று தெரியவில்லை என்று மக்கள் பயத்துடன் காணப்படுகிறார்கள்.

 

author avatar
Kowsalya