நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

0
89

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒரு மிகப்பெரிய தூண் நம்மிடம் வந்து விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குதுகளித்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கி அவர் வெற்றி பெற்றவுடன் தன்னுடைய அமைச்சரவையிலும் இணைத்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் முடிவு பெறவிருக்கிறது. திமுக கூட்டணி மற்றும் அதிமுக ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகிறார்கள்.

அனேக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்ற சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு மகளிர் அணியினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், திமுக நிர்வாகிகளின் மனைவி மற்றும் மகள்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்து திமுகவின் மகளிரணி பெண்கள், மகளிர் அணி நிர்வாகி கல்பனா தலைமையில் கோயம்புத்தூர் பீளமேடு அருகில் இருக்கின்ற அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை இரவு சமயத்தில் முற்றுகையிட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது திமுகவில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சூழ்நிலையில், மகளிர் அணியிலிருந்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தை கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லவே அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கட்சியில் பல வருடங்களாக உழைத்த மகளிருக்கு எந்தவிதமான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்கள்.