கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

0
112
Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!
Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இந்த காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ததாகவும் மேலும் இதற்கான நேர்காணல் நடத்தப்படுவதாகவும் இந்த பணிக்கு டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து ஓஎல்எக்ஸ் செயலி மூலம் விளம்பரம் படுத்தி வருகின்றனர்.

மேலும் அவ்வாறு அழைப்பு வந்தால்  8220433363 என்ற என்னை தொடர்பு கொள்ள தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களைக் கொண்டு எவரும் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை காலியாக உள்ளது என்று நம்பி யாரிடமும் பணத்தையோ அல்லது உடமைகளையோ கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும் கூட்டுறவு நிறுவனங்களின் காலி பணியிடங்கள் எதுவும் நிரப்பப்பட இல்லை எனவும் கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள் சேர்ப்பு  நிலையம் மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமார்ந்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது போன்ற ஓஎல்எக்ஸ் செயலி மூலம் குற்ற நடவடிக்கைகள் ஈடுபடும் நபர்களின் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடி ஏற்படும் அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K