Connect with us

Breaking News

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!

Published

on

கோவையில் சமீப காலமாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு. கார் குண்டுவெடிப்பு என்று அடுத்தடுத்து கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன.

இது அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே என்று ஒரு சிலர் தெரிவித்து வருகின்றன. ஏனெனில் கோவையில் பாஜக வலுவாகவே காலூன்றிவிட்டது. ஆகவே அங்கிருந்து மற்ற மாவட்டங்களில் தன்னுடைய வளர்ச்சியை பெருக்குவதற்கு அந்தக் கட்சி இப்படியான வேலைகளை செய்து வருகிறது என்று தமிழகத்தில் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

ஆனால் இந்த பெட்ரோல் குண்டு வைத்து சம்பவமும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடைபெற்றுள்ளது என்பது அனைவரும் கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே திமுக எப்படியாவது கோவையில் கால் பதித்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வந்தது. ஆனால் திமுகவின் செயல்பாடுகள் எதுவும் கோவையில் பலனளிக்கவில்லை.

Advertisement

இது ஒரு புறம் இருக்க கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தொடர்பாக தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரியாது என்பதைப் போல தமிழக காவல்துறை தற்போது கை விரித்து இருக்கிறது. ஆனால் இதனை தமிழக பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது ஜமீஷா முபின் செயல்பாடுகள் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகியது பொறியியல் பட்டதாரியான இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் தொடர்பில் இருப்பதை பெருமையாகவும் கருதினார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement

முபின் சில வருடங்களுக்கு முன்னர் கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவின் போது காரில் வெடிகுண்டுடன் தற்கொலை படையாக மாறி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த முடிவு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெளியானவுடன் காவல்துறையினரின் கண்களில் இருந்து அவர் தப்பி சென்று விட்டார்.

அதற்கடுத்தபடியாக அவருடன் இணைந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரள மாநிலம் கொச்சியில் வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுடைய இந்த திட்டத்தை காவல்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து விட்டதால் அந்த சம்பவம் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஒரு சிலரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் அந்த சமயத்தில் காவல்துறையின் கண்களில் மண்ணைத் துதிவிட்டு ஜமீஷா தப்பி சென்று விட்டார் இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2018 ஆம் வருடம் நடைபெற்றது. இருந்தாலும் அவரை முழுமையாக கண்டறிந்த மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் 6 தேவாலயங்கள் 3 சொகுசு விடுதிகளில் குண்டு வெடிப்புகள் நடந்தனர், இதில் 269 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்தது 8 பயங்கரவாதிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

அவர்கள் தற்கொலை படையாக செயல்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் பேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பக்தாதி தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை பாராட்டி பேசினார்.

Advertisement

இலங்கை நாட்டில் ரஷீத் அலி, அசுருதீன் ஜக்கரன், ஹாஸ்மி உள்ளிட்டோர் ஈஸ்டர் வெடிகுண்டு நிகழ்ச்சிக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட விவரங்கள் தெரியவந்தது அப்போது அவர்களுக்கு ஆதரவாளராக செயல்பட்ட ஜமேஷா தொடர்பான தகவலும் தமிழக காவல்துறைக்கு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் ஜமேஷாவின் செயல்பாடுகள் தீவிரமடைவதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. இந்த தகவல் தேசிய புலனாய்வு முகமையின் கவனத்திற்கு சென்றது. தேசிய புலனாய்வு முகமை 2019 ஆம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது.

Advertisement

அவரிடம் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அந்த சமயத்தில் முறையான தகவல் பரிமாற்றமும் நடைபெற்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜமேஷா போன்று தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

Advertisement

அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்காகவே நாடு முழுவதும் மத்திய உளவுத்துறை தகவல் சேகரித்தது அதிலும் ஜமீஷா முபின் தொடர்பான தகவல்களே அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து 18ஆம் தேதி மத்திய உளவுத்துறை கடிதம் மூலமாக தமிழக அரசுக்கு தகவல் வழங்கியது.

Advertisement

மேலும் இந்த தகவலை தமிழக காவல்துறை தலைமையகம், கோவை மாநகர காவல் துறைக்கு அனுப்பி வைத்து முபினை தீவிரமாக கண்காணிக்க அறுவறுத்தியது. ஆனால் கோவை மாநகர காவல்துறை அவரை கண்காணிப்பதில் கோட்டை விட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தான் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வெடிகுண்டுகளுடன் முபின் சென்ற கார் வெடித்தது. அவர் இறந்து போனார், காரும் எரிந்து சாம்பலானது.

Advertisement

ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்ற சம்பவங்கள் இவ்வாறு இருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநில அரசு விசாரிக்க வேண்டிய ஒரு வழக்கிற்குள் எதற்காக தேசிய புலனாய்வு முகமை வரவேண்டும்? மாநில தன்னாட்சியை மத்திய அரசிடம் தாரை வார்த்து விட்டாரா முதலமைச்சர்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

Advertisement

சீமானை போன்ற ஒரு சிலர் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக இப்படி குட்டையை குழப்பி வேடிக்கை பார்ப்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக இப்படி சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் இது போன்ற நபர்களை மத்திய உளவுத்துறை ரகசியமாக கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

ஆனால் மத்திய உளவுத்துறை நினைத்தால் அவருடைய இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கும், இந்த கார் குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டு அவரையும் கைது செய்து தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான அதிகாரம் மத்திய உளவுத்துறைக்கு இருக்கிறது என்பது சீமானுக்கு தெரியாமல் போய் விட்டதோ என்னவோ.

Advertisement
Continue Reading
Advertisement