நாம் தேவையில்லை என்று தூக்கி எறியும் தேங்காய் தொட்டியில் இவ்வளவு பயன்களா!

0
236

தினந்தோறும் நாம் தேவையில்லை என்று தூக்கி எறியும் பொருள்களில் ஒன்று தேங்காய் தொட்டி.இந்த தொட்டியில் இவ்வளவு பயன்களா என்று நம் வாயடைத்துப் போகும் அளவிற்கு நன்மைகள் உள்ளது.

தேங்காய் தொட்டியை தீயில் போட்டு கருகும் வரை விட்டு அதனை எடுத்துவிடவும் அதன் சூடு குறைந்தவுடன் அதனை நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
இந்தப் பொடியின் பயன்கள் :

என்னதான் இரு வேளை பற்களை துலக்கினாலும் வாயின் உட்பகுதி பல்லில் கறை இருக்கத்தான் செய்யும் இந்த காறையை நீக்க பெரும்பாலோனோர் ஏதேதோ செய்திருப்பார்கள் ஆனால் அவ்வளவு எளிதில் பயன் கிடைப்பதில்லை.

ஒரு எளிய தீர்வு இந்த தேங்காய் தொட்டியை பயன்படுத்தி அரைத்து வைத்த கறி பொடியாகும். இதனைச் சிறிதளவு எடுத்து பல் துலக்கி வருகையில் பற்க்கறை எளிதில் விடுபடும்.

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதனை மிதமாக சூடு செய்து அத்துடன் இந்த தேங்காய் மூடியை கறிக்கி பொடி செய்யப்பட்ட பொடியை சிறிதளவு எடுத்து அந்த எண்ணெயில் கலந்து வாரம் இருமுறை தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசி வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும்.

இந்த கரி பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் செய்தால் கரும்புள்ளிகள் ,மருக்கள் மற்றும் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

author avatar
Pavithra