Coca Cola விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் விளக்கிய தளபதி விஜய்!! அதிர்ந்த ரசிகர்கள்!!

0
79

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரை திரையுலகமே இளையதளபதி என்றே அழைப்பர்

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இவர் நடித்து வெளியான கத்தி படத்தின் மூலம் இவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

அதற்கு காரணம் அவரே விளம்பரத்தில் நடித்த கொக்கோகோலா நிறுவனத்தை எதிர்த்து அந்தப்படத்தில் பேசியிருந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் கொக்கோகோலா விளம்பரத்திற்கு நான் நடித்தது தவறுதான். அப்போ அதனுடைய வீரியம் எனக்கு தெரியவில்லை. கத்தி படத்தில் நடித்த பிறகு தான் விவசாயிகளின் பிரச்சினையை நான் உணர்ந்து கொண்டேன். இனிமேல் இப்படி போன்ற தவறுகளை செய்யமாட்டேன் என்றும் விளம்பரங்களை நடிப்பதற்கு முன்பு ஒன்றுக்குப் பலமுறை யோசித்த பின்பே நடிப்பேன் என்றும் வாக்களித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரசிகர்கள் தவறுகளை உணர்ந்து அதை சரி செய்வதற்கு ஒரு மனசு வேண்டும் என்றும், தளபதி எப்போதும் தளபதி தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

author avatar
Parthipan K