நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம்

0
55

நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம்

அடுத்த 5 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன் அதிகரிக்க கோல் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும் அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினை கொண்டுள்ளன. பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்திய நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் தனது நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன் அளவிற்கு உயர்த்த உள்ளதாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகால் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதில் 9 கோடி டன் புதிய சுரங்கங்கள் வாயிலாகவும் 31கோடி டன் தற்போதைய சுரங்கங்களின் விரிவாக்கம் மூலம் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்திய நிறுவன பங்குகளின் விலை பங்கு ஒன்று 196.60 பைசாவுக்கு கைமாறியது வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 197. 30 காசுக்கும் குறைந்தபட்சமாக 190.90 க்கும் இந்த பங்குகள் இறுதியில் 191.65 நிலைகொண்டது.

author avatar
CineDesk