சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! – முதல்வர் டிவிட்..!

0
101

சென்னை மாணத்தில் 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சி நீதிகட்சி ஆகும். 1920ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதி கட்சி வெற்றி பெற்றது.1920–37 காலகட்டத்தில் நீதிகட்சி நான்கு முறை ஆட்ட்சி செய்தது.1938ம் ஆண்டு ஈ.வே.ரா நீதிகட்சியின் தலைவரானார். அதனை தொடர்ந்து 1944ம் ஆண்டு நீதிகட்சி திராவிடர் கழகமாக மாறியது. நீதிகட்சி தமிழகத்தில் பல முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.

இன்று நீதிகட்சி தொடங்கப்பட்ட நாள். அதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஈட்டுள்ளார்.அதில், இன்று சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், சாதியின் பெயரால் கல்வி – வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம் எனவும் பதிவிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து, தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து – அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம், ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா.. விழி! எழு! நட! எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.