இனி இதுபோன்ற ஒரு செய்தி வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர்ப்போம் முதலமைச்சர் ஸ்டாலின்

0
139

மத்திய  அரசு சார்பாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் தமிழகத்தைச் சார்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் தமிழகத்தில் 15 மாணவ மாணவிகள் இந்த தேர்வு பயம் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.அதோடு இந்த நீட்தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என தெரிவித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் போராட்டத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். நீட்தேர்வு காரணமாக சென்ற 12ஆம் தேதி சேலத்தைச் சார்ந்த தனுஷ் என்ற மாணவர் ஒருவரும், நேற்றைய தினம் அறியலூரை  சார்ந்த கனிமொழி என்ற ஒரு மாணவியும், தற்கொலை செய்து கொண்டார்கள் .நீட்தேர்வு காரணமாக தமிழகம் அடுத்தடுத்து மாணவச் செல்வங்களை இழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு செய்தி குறிப்பில் நீட் என்ற உயிர்க்கொல்லிக்கு  அரியலூர் மாணவி கனிமொழி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி அனிதாவில் ஆரம்பித்து கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர் பலிக்கு இத்துடன் முற்றுப்புள்ளி ஏற்பட வேண்டும் என மாணவர் சமுதாயத்தையும், அவர்களுடைய பெற்றோரையும், தமிழகத்தின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு சகோதரனாகவும் கைகளைப் பிடித்து கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும்  விதமாக கொண்டு வரப்பட்ட  இந்த நீட் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதற்கான சட்ட போராட்டத்தையும் முழுவீச்சில் ஆரம்பித்திருக்கிறோம். பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மற்றும் ஒத்துழைப்புடனும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இருக்கின்ற இந்த சட்ட முன்வடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று நீட் தேர்வை முழுமையாக தடை செய்யும் வரை இந்த சட்டப் போராட்டத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லை என மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், உறுதியளிக்கிறேன் என கூறியிருக்கிறார் ஸ்டாலின். நீட் தேர்வு என்பது தகுதி எடைபோடும் தேர்வு கிடையாது என்பதை ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவனத்தில் தில்லுமுல்லு போன்ற பல மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தை இயக்குவதற்காக இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதனை நீக்கபடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

மாணவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் தாய், தந்தையர்கள் தங்களுடைய வீட்டு செல்வங்கள் மனம் தளராமல் இருக்கும் பயிற்சிக்கு தாங்களே முன் உதாரணமாக இருந்து அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். உயிர்காக்கும் மருத்துவ படிப்புக்காக தற்கொலை செய்துகொண்டு உயிர் விடும் அவலத்தை தடுத்திடுவோம், சட்டப் போராட்டத்தின் மூலமாக நீட் தேர்வை விரட்டி விடுவோம் என கூறியிருக்கிறார்.

மாணவி கனிமொழி  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். இனிமேல் இதுபோன்ற இன்னொரு இறங்கல் செய்திக்கு இடம் தராத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவோம் என குறிப்பிட்டு உள்ளார்.நீட்  காரணமாக உயிரிழந்த மாணவி கனிமொழியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர் திமுகவின் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.