எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

0
76

எவன் எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் எல்லாம் நல்லா நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சியினர் விஜய்யின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வந்தனர். தமிழக அமைச்சர்களும் இவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், ஒரு படம் வெளியாகும்போது அரசியல் பேசி தனது படத்தின் விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லவே நடிகர்கள் இதுபோல் பேசுவார்கள் என்று அமைச்சர்கள் கூறி சமாளித்தனர்,

இருந்தாலும் விக்ரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் நடைபெற உள்ள இச்சமயத்தில் விஜய் படத்திற்கு எதிர்ப்பு நேரடியாக தெரிவித்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று சிறிது அடக்கி இருந்தனர் அமைச்சர்கள், ஆனால் இடைத்தேர்தல் முடிந்த பிறகு தங்களது அஸ்திரத்தை தமிழக அரசு எடுக்க ஆரம்பித்தது, முதல் கட்டமாக படத்திற்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது, சென்சாருக்கு கொண்டுசென்ற போது தணிக்கை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்தது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இவற்றுக்கெல்லாம் மேல் பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் சிறப்பு காட்சியை திரையிடலாம் என்ற விதிமுறைக்கு அதிரடியாக தடை விதித்தது, பிகில் படத்திற்காக தான் தமிழக அரசு இது போன்று செயல்படுகிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்திற்காக முன்பதிவை பதிவு செய்து பணத்தை வசூலித்து திரையரங்கங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவும் அரசு உத்தரவிட்டது, சிறப்பு காட்சிகள் எதுவுமே இனி இந்த படத்திற்கும் அனுமதி கிடையாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது, இதனால் பிகில் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

காரணம் சிறப்பு காட்சியில் மட்டுமே கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்க முடியும், லாபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது தமிழக அரசு.

நடிகர் விஜய் பேசிய பேச்சுதான் அத்தனைக்கும் காரணம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் போட்டு தங்கள் கஷ்டத்தை வெளிப்படுத்தும் அளவில் ஆடிப்போயிருக்கின்றனர்.

எடப்பாடியின் அதிரடியை நடிகர் விஜய் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார், எப்படியாவது முதல்வரை சந்தித்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கித் தருமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் கல்பாத்தி அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு பெற்ற நபர்கள் மூலம் முதல்வர் தரப்பை அணுகி வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

நடிகர்கள் திரையில் மட்டும்தான் தான் மாஸ் ஹீரோ என்று கம்பீரம் காட்டிக் கொள்ளலாம், நிஜத்தில் ஆளும் தரப்பு தான் ஹீரோவாக இவ்விஷயத்தில் காட்டுகிறது என்பது நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here