விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!

0
80

தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247.9கோடி மதிப்பீட்டிலான 21 நீர்வள மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வளைய சித்ரா கிராமத்தில் உள்ள பாலாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது.தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆறாவதாக ரூ 42.2கோடி மதிப்பீட்டிலான தடுப்பணைக்கும்,கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இது போன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பல்வேறு நீர்வள மேம்பாட்டு திட்டங்களுக்காக 248.9 கோடி செலவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அதன் மட்டம் வெகுவாக உயரும். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் அதிகரிக்கும்.இந்த திட்டத்தால் ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் உரையாற்றினார்.மேலும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

https://bit.ly/3hPrS6e

author avatar
Pavithra