வரும் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் முடிவு !

0
99

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டது.இதன் அடிப்படையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து காணொளி காட்சி மூலம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டம் ஒன்று நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அசுவின் குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையில் புதுச்சேரியில் முதல் கட்டமாக வரும் 5 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 12 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.மேலும் கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை.மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, மதிய உணவு உறுதி செய்யப்பட வேண்டும்
பள்ளிகளில் உடலின் வெப்பத்தை அளவிடக்கூடிய கருவிகளை பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் முன்பாகவும் கிருமிநாசினியை வைத்திருக்க வேண்டும்,வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியிடுடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம் என்று தெரிவித்திருந்தது ஆனாலும் முழுமையான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடபடவில்லை இதுகுறித்து நாளை மறுநாள் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K