ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

0
50

 

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…

 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேகவெடிப்பு என்பது 10 செமீ மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறோம். இந்த மேக வெடிப்பு நிகழ்வுகள் பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் சோலன் மாவட்டத்தில் ஜாடோன் கிராமம் உள்ளது. அங்கு நேற்று(ஆகஸ்ட்13) இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பில் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த விபத்தில் சிக்கிய 6 பேர் காப்பற்றப்பற்ற நிலையில் 3 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேர்கள் ஹர்னம்(38 வயது), ஹெம்லாட்டா(34 வயது), கமல் கிஷோர்(35 வயது) மூன்று பெரியவர்களும், கோலு(8 வயது), ரக்சா(12 வயது), ராகுல்(14 வயது), நேஹா(12 வயது) உள்ள நான்கு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

 

ஹிமாச்சல் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது.

 

அதே போல சிம்லாவில் சிவன் கோவில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பல நபர்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஹிமாச்சல் மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.