உலகையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: இதுவரை இல்லாத அளவிற்கு 2 மடங்காக உருகி வரும் பனி!

0
78

புவிவெப்பமடைதல் மற்றும் மாசுபாடு அடைவதன் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமானது  பூமியின் சராசரி வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த பருவ நிலை மாற்றத்தால் பாறைகளாக உள்ள பனிக்கட்டிகள் உருகி வருவதால் கடல் நீரின் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2019இல் மட்டுமே, பனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் உள்ள பனி அடுக்கு பாறைகள் ஒரு நிமிடத்தில் பல மில்லியன் டன் அளவுள்ள பனிக்கட்டிகள் உருகிவருகிறது என பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது அச்சுறுத்தும் தகவலாக இருக்கிறது.

Climate change threatening the world 2 times more snow melting than ever before
Climate change threatening the world: 2 times more snow melting than ever before!

இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோளின் படங்களை சாட்சியாக விஞ்ஞானிகள் காண்பிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 532 பில்லியன் டன் அளவிலான பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 2003 முதல் பனி உருகுதல் தொடர்பான செயற்கைக்கோளின் படங்களை அளவிட்டு வருகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் பனி உருகும் சராசரி அளவைவிட கடந்த 2019இல் பனி உருகும் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Climate change threatening the world 2 times more snow melting than ever before
Climate change threatening the world: 2 times more snow melting than ever before!

 

கிரீன்லாந்தில் இதுவரை ஆண்டுக்கு சராசரியாக 255 பில்லியன் டன் அளவுள்ள பனி அடுக்குகள் மட்டுமே உருகி வந்துள்ள நிலையில், இந்த அளவை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கிரீன்லாந்தில் சுமார் 96 சதவீத பனிப்பாறைகள் உருகி ஆரம்பித்துள்ளதாகவும், இது இது ஒவ்வொரு ஆண்டும் உருகும் சராசரி அளவைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் உருகி வருகிறது.

மேலும் கிரீன்லாந்தில் உள்ள மொத்த பனிப் பாறைகள் உருகினால் கடல் மட்டத்தின் அளவு 6 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனைக் கட்டுப்படுத்த வழி ஏதுமில்லை என்கிற நிலையில், கார்பன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பெருமளவு கார்பன் பயன்படுத்தாமல் இருப்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு சிக்கல் இல்லாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K